Sunday, February 16, 2025
Huis Blog

ட்ரம்பின் முடிவினால் காப்பாற்றப்பட்ட ஜனாதிபதி அநுரவின் ஆட்சி..!

0

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பணிகளை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவானது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நிம்மதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டர்ம்ப நிர்வாகம், வெளிநாடுகள் மீதான பங்களிப்பை குறைத்து அமெரிக்காவின் பொருளாதராத்தையே பிரதான காரணியாக எடுத்துக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஒரு நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்பினால், அதனை செயற்படுத்த கூடிய கருவியாக USAID நிறுவனம் இருந்து வந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலும் அவரை வெளியேற்றவும், பின்புலத்தில் USAID நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன்படி, USAID இன் பணிகளை இடைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முடிவானது, அநுர அரசாங்கத்திற்கு பாரிய நிம்மதியையும் அமைதியையும் வழங்கி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

யாழில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அச்சுறுத்தல்; அரசின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு..!

0

போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்றைய தினம் (14) நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர்.

இருப்பினும், எமக்கான வேலைக்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். தொலைபேசி அழைப்புகள் ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றது.

நாங்கள் அரசுக்கு எதிராக போராடவில்லை, நாங்களும் இந்த அரசாங்கத்தை வரவேற்கிறோம். அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம், போராட்டம் செய்ய வேண்டாம் என ஒரு தரப்பினர் தடுக்கின்றனர்” என்றார்.

இது குறித்து அமைச்சர் சந்திரசேகரனிடம் வினவியவேளை,

“புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக்காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது.

போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா? விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இது குறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம்” என தெரிவித்தார்.

முழுநேர அரசியல்வாதிகள் ஆசிரியர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?

0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என்ற செய்தியை ஆளுநர் செயலகமும் வெளிப்படுத்திள்ளது. இந்த செய்தி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என தெரிவித்திருப்பின் அது தொடர்பாக எவரும் ஆராய முற்பட வேண்டிய தேவை எழுந்திராது.

இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், பங்குபற்றியதாக உள்ளது.

திரு. பிரதீப் சுந்தரலிங்கம் இப்போது தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரகாவும் உள்ளார். இதே போல திரு. ஜெகதீஸ்வரன் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதே போல அமைச்சர் ஒருவரின் பிரத்தியேகச் செயலாளராக முழுநேர கடமைபுரியும் ஒருவரும் பங்கு பற்றியுள்ளார்.

ஒரு அரசாங்க உத்தியோகத்தர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தனது அரச சேவையை இாஜினாமாச் செய்தல்வேண்டும். எனவே ஆளுநருடனான ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசிரியப்பதவியை இராஜினாமாச் செய்தவர்கள். தற்போது ஆசிரிய சேவையில் இல்லாதவர்கள்.

வடக்கில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது மருத்துவர் பதவியை இராஜினாமாச் செய்யாது பாராளுமன்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளாகியுள்ளமையை சவாலுக்குட்படுத்தி அவரை பாராளுமன்ற உறுப்பினர்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உயர்நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டள்ளமையும் கவனத்துக்குரியது.

ஆனால் இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் ஒரு கோரிக்கை முன்வைத்தார் என்ற செய்தியும் காணப்படுகிறது.

தாமே இப்போது ஆசிரியர் பதவியில் இல்லாதநிலையில் அரசியல் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினராகவும் கல்வி அமைச்சு அல்லாத வேறு ஒரு அமைச்சின் பிரதிஅமைச்சராகவும் இருந்து கொண்டு ஆசிரியர்களை, அசிரியர் சங்கம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமன்றி இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதுவும் வியப்பாக உள்ளது.

இதேபோல இடமாற்றங்களின் போது அரசியல் தலையீட்டுக்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் சுயாதீனமாகச் செயற்படுமாறும் அவ்வாறு செயற்படும்போது அந்தச் செயற்பாட்டுக்கு பக்கபலமாக இருப்போம் என பிரதியமைச்சராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு ஆசிரியர் சங்க பதவியையும் பேணிக்கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுவது எங்ஙனம் என வியப்பாக உள்ளது.

வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பவற்றில் கொடுக்கப்படும் கடிதங்களுக்கு ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தேவையற்ற நிர்வாக தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது என்ற விடயமும் காணப்படுகிறது. நல்ல விடயம் தான் ஆனால் இந்த சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் பதிவுத்தாபலில் அனுப்பிய கடிதங்களுக்கே ஏற்புக்கடிதம் வழங்காதவர்கள் எப்படி அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முடியும்.

ஏற்கனவே தொழிற்சங்கவாதி ஒருவரால் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண தளபதியாருக்கு விடப்பட்ட சவாலுக்கு இதுவரை பதிலளிக்கும் திராணியற்ற இவர்களும் இவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆளுநராலும் எந்தவித விமோசமும் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்தம்.

சாவகச்சேரி பிரதேச செயலக அதிகாரி தீயில் கருகிய நிலையில் வைத்திய சாலையில்..!

0

யாழ் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீஸ் தீயில் எரிந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவருடனான மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது.

யாழ் சிறையில் கணவன்; விடுதியில் சட்டத்தரணியுடன் பிடிபட்ட கைதியின் மனைவி..!

0

யாழில் உள்ள விடுதி ஒன்றில், பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் சந்தேக நபரின் மனைவியுடன் அந்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி ஒருவர் தங்கிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பணமோசடி வழக்கு ஒன்றில் பெண்ணின் கணவன் விளக்கம்றியலில் உள்ள நிலையில், சந்தேக நபருக்காக வாதாடிய சட்டத்தரணி , கைதியின் மனைவியும் விடுதி அறையில் நிறை வெறியில் இரவிரவாகக் கூத்தடித்ததாக, அந்த விடுதியின் பணியாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சட்டத்தரணி தனது காரில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டி வந்து விடுதி அறையில் இவ்வாறு கூத்தடித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் நள்ளிரவின் பின் அறைக்குள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அதிகாலை சட்டத்தரணி தனது காரில் எஸ்கேப் ஆகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில் அறையில் அரை குறை மயக்கத்தில் இருந்த பெண்ணை மீட்ட பணியாளர்கள் பெண்னிடம் விசாரித்த போதே தான் விளக்கமறியலில் இருக்கும் ஒருவனின் மனைவி என கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்காளியுடன் சமரசப் பேச்சுக்கள் நடத்த சட்டத்தரணி தன்னை கூட்டி வந்ததாகவும் ஆனால் வழக்காளி சட்டத்தரணியை சந்திக்க மறுத்ததால் நேரம் ஆகிவிட்டது என கூறி தன்னை விடுதியில் தங்க வைத்ததாகவும் பெண் கூறினாராம்.

அதோடு குளிர்பானம் என கூறி மதுபானத்தை தனக்கு கொடுத்து மயக்கி விட்டதாகவும் பெண் , விடுதி பணியாளர்களிடம் கூறியுள்ளாராம்.

தையிட்டி விவகாரத்தில் மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை…!

0

தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று தையிட்டி காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தையிட்டி காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில்,

“மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர அண்மையில் யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிடி விவகாரம் இருக்கின்றது.

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

அதேநேரம், தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடயம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடயம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர்.

ஆனால் இன்று வாக்குறுதி வழங்கிய மூவரும் பொம்மைகள் போன்று வாய் பேசாது உள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம்.

ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடயத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தப்பட ஜனாதிபதிக்கு கூறியிருந்தார்.

ஆனாலும் அன்று கஜேந்திரகுமார் எம்.பி எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்நிலையில், எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறு நாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச் சேர்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் ‘உன்னைப் போல் உன் அம்மாவும் சுப்பர் பிகர்’ என மாணவிக்கு கூறிய ரியூசன் வாத்தி..!

0

யாழ் வலிகாமம் பகுதியில் ரியூசன் வாத்தி ஒருவர் குறித்த ரியுசன் ஓனரால் மாணவர்களுக்கு முன் கடுமையாத் தாக்கப்பட்டு துரத்தப்பட்டதாகத் தெரிய வருகின்றது,

கடந்த புதன் கிழமை வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. தரம் 9 மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கும் யாழ் பல்கலைக் கழக வேலையில்லாப் பட்டாதாரியான 26 வயது வாத்தியாரே குறித்த ரியூசன் முதலாளியால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார்.

குறித்த வகுப்பில் யாழ் நகர்ப் பிரபல பாடசாலையில் கற்கும் அழகான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்துள்ளார். அம் மாணவியை அடிக்கடி குறித்த வாத்தியார் ‘சுப்பர் பிகர்’ என மாணவர்களுக்கு முன் வர்ணித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்கள். இதனையடுத்து பெற்றோர் குறித்த கல்வி நிலைய முதலாளிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை கருத்தில் எடுத்த கல்வி நிலைய முதலாளி தமிழ் வாத்தியாரை அழைத்து இது போல் இனி கதைக்க கூடாது எச்சரித்து அனுப்பியுள்ளார்.

மாணவியை தந்தையே தொடர்ச்சியாக ரியூசனுக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். ஆனால் கடந்த சனிக்கிழமை மாணவியின் தாயார் மாணவியை ரியூசனிலிருந்து ஏற்றிச் சென்றதை அவதானித்த தமிழ் வாத்தியார் அடுத்தநாள் ரியூசனில் வைத்து மாணவிக்கு அருகில் சென்று கேள்விகள் சிலவற்றை கேட்ட பின் ”உன்னைப் போலத்தான் உன் அம்மாவும் சுப்பர் பிகர்” என மெதுவாக கூறியதாகத் தெரிய வருகின்றது.

இதனை எப்படியோ அறிந்த மாணவர்கள் மீண்டும் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த புதன் கிழமை வகுப்புக்கு வந்த தமிழ் வாத்தியாரை வெளியே அழைத்து குறித்த ரியூசன் முதலாளி தாக்கிய பின் அவரை ரியூசனிலிருந்து துரத்தி விட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரனை உயிருடன் பாதுகாப்பாக கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன..!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மகிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை.

மேற்குலகைப் பகைத்துக் கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேற்குலக நாடுகளைப் பகைத்துக் கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர்.

அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

1987 வடமராட்சி சமரின் போது இந்தியா பருப்புப் போட்ட வேளை (அந்த காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை விமானத்தின் வழியாக மக்களுக்கு வழங்கினர். இதில் பருப்பு அதிகமாக வழங்கப்பட்டமை சுட்டிக் காட்டத்தக்கது), ஜே.ஆர். ஜயவர்தன போரை நிறுத்தினார்.

அன்று போரை நிறுத்தி இருக்காது விட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும். வெளிநாடுகளுக்குப் பணிந்து அன்று போரை நிறுத்தினர்.

மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.

அதனால்தான் மகிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ்ப் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

காலாவதியான 15 ஆயிரம் தொன் அரிசி மீட்பு; வர்த்தகர் கைது..!

0

சுமார் 15 ஆயிரம் தொன், காலாவதியான அரிசி மூட்டைகள், வர்த்தக நிலையத்திற்கு இறக்கப்பட்டு கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மாவனெல்ல நகரில், வர்த்தக நிலையமொன்றில், நேற்று (03) இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மூட்டைகளில், காலவதியாகும் திகதியாக 2023 நவம்பர் மாதம் பொறிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அரிசி மூடைகள் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்கு முன்பாக லொறியில் இருந்து இறக்கப்பட்டு வர்த்தக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனையடுத்து அந்த வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் கைது செய்யப்பட்டார். அவரை, கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளுடன் மாவனெல்ல நீதவான் முன்னிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தவர் மாவை சேனாதிராசா – உருத்திரகுமார்

0

தமிழர் உரிமைக்காக சிறை சென்ற தமிழ்த் தேசியத்தின் அடையாளம் மாவை சேனாதிராசா. அவர்களின் மறைவு தமிழ் தேசியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இழப்பாகும்.மாவை சேனாதிராசா அவர்களின் இழப்பின் துயரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பங்குகொள்வதுடன், இழப்பின் துயரில்வாடும் அவரின் மனைவி, மக்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் , தமிழ் தேசியவாதிகள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக் கொள்கின்றது.

காலங்கள் பல கடந்து விட்டாலும், தமிழர் உரிமைக்காக பல போராட்டங்கள் ஆரம்பித்த காலத்தில் உருவாகிய போராளிகள் வரிசையில் மாவை சேனாதிராசாவும் ஒருவராவர், இவர் 1973 காலத்தில் இளைஞர்களின் மனங்களில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக அன்றைய சிறீமாவோ அரசாங்கத்தினால் பாதுகாப்பு சடடத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சிறைவாசத்தை 5 வருட காலங்களுக்கு மேல் அனுபவித்தார்.

மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் சிறைவாசம் கழித்து புகையிரதத்தில் யாழ் நகரத்திற்கு வந்தபோது யாழ் நகர மக்கள் உணர்ச்சி பூர்வமான வரவேற்பைக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில் பங்கு கொண்ட நினைவு இன்றும் என் நெஞ்சத்தில் உள்ளது.

மாவை சேனாதிராசா பல தடவைகள் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவித்தார். இச் செய்தியானது அன்றைய காலத்து இளைஞர்கள் மனதில் அகிம்சை மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே ஒரே வழி என்ற சிந்தனையை உருவாக்கியது என்றால் மிகையாகாது.

மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, முத்துகுமாரசாமி(குமார்) உட்பட 42பேர் இன விடுதலைக்காய் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் என்ற செய்தி தமிழர் மனத்தில் கொதி நிலையை உருவாக்கியது.

அன்றைய கால பத்திரிகைகளான தந்தை செல்வாவின் சுதந்திரனும், ஈழநாடும் முக்கிய செய்திகளை பிரசுரித்து சுதந்திர தாகத்தை வளர்த்து வந்தது மட்டுமல்லாது, இலங்கை தீவின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்த தமிழர் மனதில், சிங்கள பெளத்தருடன் சேர்ந்து வாழவே முடியாது, பிரிந்து செல்வதே ஒரே வழி என்ற பாதைக்கும் வழி சமைத்தது.

இவர்கள் சிறையில் வாடிய காலத்தில் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களும் தோன்றி “ஆயுத வழிமூலம் ” எனும் கருத்தியலை உருவாக்கின. இலங்கை குடியரசு நாடாக உருவாக்கப்பட்டமையும் இக்காலத்தில் தான் நடந்தது.

குடியரசு தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டது. வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் கிழக்கு தாயகத்தில் மிகவும் காத்திரமாக மாவை சேனாதிராசா பணியாற்றிமை குறிப்பிடத்தக்கது.

மாவை சேனாதிராசாவின் உடன் பிறந்த சகோதரன் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயர் சிந்தனையை எம் மத்தியில் விதைத்து, தமிழர் உரிமை மீட்புக்கு அறுபது (60) வருடங்களுக்கு மேலாக தமிழ்தேசிய அரசியல் போராட்டத்தில் அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா. அத் தேசியத்தை கட்டிக்காப்பதே நாம் அவருக்கு செய்யும் பெரிதான அஞ்சலியாகும்.

error: Alert !!