Friday, May 9, 2025
Huisதாயகம்கனடாவிலிருந்து வந்து வவுனியாவில் 17 வயது யுவதியுடன் ஜல்சா புரிந்த அங்கிள்..!

கனடாவிலிருந்து வந்து வவுனியாவில் 17 வயது யுவதியுடன் ஜல்சா புரிந்த அங்கிள்..!

கனடாவிலிருந்து வந்த 49 வயதான குடும்பஸ்தர் வவுனியாவில் இளம் யுவதி ஒருவருடன் உறவு கொண்டபின் 35 லட்சம் ரூபா பணத்தை யுவதிக்கு தாரை வார்த்துள்ளார். கடந்த வருட நடுப் பகுதியில் கனடாவிலிருந்து வந்து ஓமந்தை மூன்றுமுறிப்புப் பகுதியில் பல ஏக்கர் காணி வாங்கி அதில் பண்ணை ஆரம்பிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருந்தார் கனடாவை வதிவிடமாகக் கொண்ட குடும்பஸ்தர்.

அந்தக் காணியை துப்பரவு செய்வதற்காக பலரை வேலைக்கு அமர்த்தி துப்பரவுப் பணியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடன் குடும்பஸ்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் மூத்த மகளை குறித்த குடும்பஸ்தர் பல இடங்களுக்கும் காரில் கொண்டு திரிந்துள்ளார். 17 வயது யுவதியான குடும்பப் பெண்ணின் மகளுக்கு ஏற்கனவே காதலன் ஒருவன் இருந்ததை கனடா குடும்பஸ்தர் அறியவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த யுவதி கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனையடுத்து யுவதியின் தாயார் குறித்த குடும்பஸ்தரை கடுமையாக அச்சுறுத்தி கர்ப்பத்திற்கு காரணம் நீதான் என கூறி பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் அச்சுறுத்தி வந்ததுடன் பெருமளவு பணம் கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

பொலிசாருக்குப் போனால் தன்னை பிடித்து சிறை வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் யுவதியின் தாயாருக்கு பகுதி பகுதியாக 4 தடவைகளாக 35 லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளார் கனடா குடும்பஸ்தர். யுவதி தற்போது 6 மாத கர்ப்பிணி.

இந் நிலையில் யுவதி ஓரிரு மாதங்களுக்கு முன் தனது காதலனை பதிவுத் திருமணம் முடித்து தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கனடா அங்கிள் யுவதியின் தாயாருடன் முரண்பட்டு யுவதியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என கூறி தன்னை அச்சுறுத்தி 35 லட்சம் பணம் பறித்தாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக யுவதியின் தாயாரிடம் கூறியுள்ளார்.

கனடா அங்கிளின் ஆவேசத்தையடுத்து யுவதியின் தற்போதைய கணவன் கனடா அங்கிளின் பண்ணைக்கு வந்து அங்கிளை துரத்தித் துரத்தி தாக்கியதாகத் தெரிய வருகின்றது.

அத்துடன் 17வயதான சிறுமியை கற்பழித்த நீ சிறைக்குள் இருக்க வேண்டியவன், அவளை ஏற்று நான் திருமணம் முடித்துள்ளேன் என தெரிவித்து தாக்கியதாக தெரிய வருகின்றது.

இச் சம்பவத்தின் பின் கனடா அங்கிள் பண்ணையிலிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் அங்கு நின்று வேலை செய்த சிங்களப் பெரும்பாண்மையின கூலியாட்கள் 7 பேரின் சம்பளத்தையும் கொடுக்காது அங்கிள் கனடாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!