Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழில் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய இருவர் கைது..!

யாழில் நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய இருவர் கைது..!

யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (10) பருத்தித்துறை பகுதியில இடம் பெற்ற மரண சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டன.

இதன் சத்தம் காரணமாக பருத்தித் துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் நண்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டு நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

விரைந்து செய்யப்பட்ட பொலிசார் பட்டாசு கொளுத்திய இருவரை கைது செய்தனர். இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!