Wednesday, February 5, 2025
Huisதாயகம்தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தொடர்பில் வெளியான தகவல்..!

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தொடர்பில் வெளியான தகவல்..!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி திருகோணமலையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று, இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!