Wednesday, February 5, 2025
Huisதாயகம்மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; மூவர் காயம்..!

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; மூவர் காயம்..!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இன்று (16) காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வியாழக்கிழமை வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர், அவர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!