Friday, January 24, 2025
Huis Blog

இன்றைய இராசி பலன்கள் (21.01.2025)

0

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்
இன்று முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான நாளாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்
இன்று கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்
இன்று உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்
இன்று படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி
இன்று உங்கள் பிள்ளைகள் உங்களை விட புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். தாய், தாய்வழி உறவினர்களுடன் உறவு பலிக்கும். மருத்திவ செலவுகள் காத்திருக்கிறது. கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்
இன்று வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். எதிலும் அடக்கமாகப் பேசுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்
இன்று செலவழிப்பதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வீர்கள். மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு
இன்று பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்
இன்று உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்
இன்று உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்
இன்று வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது. மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறையாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு சிஐடி அழைப்பு..!

0

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தவறாக செய்தி வெளியிட்டதன் காரணமாக சிங்கள பத்திரிகை ஒன்றின் ஆசிரியருக்கு சிஐடியில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அவரை இன்றைய தினம் (20.01.2025) குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுளளது.

இதற்கு முன்னரும் குறித்த பத்திரிகை இது தொடர்பில் தவறான செய்தி வெளியிட்டிருந்தமை தொடர்பில் பத்திரிகையின் செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் நீதிமன்ற நிருபர், உள்ளிட்டோர் விசாரணைக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் குறித்து அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல தவறான கருத்துக்கள் மற்றும் காணொளிகள் என்பன பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் அரசினால் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தத்தது

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்..!

0

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்; வீதியில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம்..!

0

மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஹட்டனில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கியது. அக்கட்சியினர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

அரிசி விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தேங்காய் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் என்பன பாரிய அளவில் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தைக்கூட பொதுபயன்பாட்டு ஆணைக்குழுதான் குறைத்துள்ளது.

தற்போது கூட்டுறவு தேர்தல்களில் அரசாங்கம் தோல்வி அடைந்து வருகின்றது. எனவே, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அரசாங்கத்துக்கு இருப்பதால் அரிசி மாபியாவுக்கு முடிவு கட்ட வேண்டும். கொள்ளையர்களை பிடிக்க வேண்டும். அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை அவதானித்துவருகின்றோம்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்றார்கள், சம்பளம் 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றார்கள்.

அவற்றை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும்.அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம்.” – என்றார்.

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

0

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியமான அரசியல் தீர்வாக வலியுறுத்துவது சமஷ்டி முறையிலான ஆட்சியை தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடக பேச்சாளரும் முன்னால் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று (18) இடம் பெற்ற தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் கட்சியின் ஒரே இலக்காக சமஷ்டி முறை தீர்வே ஆகும்.

தற்போது ஒற்றையாட்சி என்றால் என்ன சமஷ்டி முறை என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தெரிகிறது .எழுபது வருட காலமாக பல மாற்றங்கள் இடம் பெற்றுள்ள போதிலும் அரசியல் தீர்வாக இதனையே வலியுறுத்தி வருகிறோம்.

கோத்தபாய அரசாங்கத்தில் இது தொடர்பான வரைபை வரைந்து இது குறித்த தீர்வு தொடர்பில் முன்மொழிவுகளை 2020 டிசம்பர் மாதமளவில் அந்த குழுவுக்கு அனுப்பியிருந்தோம்.

இதில் மறைந்த தலைவர் இரா.சம்மந்தன் ,சேனாதிராஜா, சித்தார்த்தன் ,அடைக்கலநாதன் போன்றோர் உட்பட கையொப்பமிட்டு அனுப்பப்பட்டு சந்திப்பு நடாத்தப்பட்டது இதனை தொடர்ந்து தற்போது ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

இவர்கள் இந்த விடயங்களுக்கு பொறுப்பாக இருந்து செயற்படுவார்கள். தமிழ் பேசும் பரப்பில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் இதற்கு மேலதிகமாக கட்சியின் வழக்குகளும் நிலுவையில் உள்ளது அத்தனை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பேசப்பட்டதுடன்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமாக முன்னுரிமை அடிப்படையில் முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களை பட்டியலில் இணைப்பதுடன் இளைஞர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பாக பேசப்பட்டது.

மேலும் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாக பேசப்பட்ட நிலையில் முதன் முதலில் அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதியின் இந்திய விஜயம் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது இடது சாரி கொள்கை கொண்ட இவர்கள் சீனா இந்தியா தொடர்பில் எப்படி செயற்பட போகிறார்கள் என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டால் சட்ட நடவடிக்கை..!

0

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக மின்சார சபை செயற்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாட்டு பிரஜைகளுக்கு உண்டு என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் குடியரசின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தில் தான் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் செயற்படுகிறது.

மின்கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து நிதியமைச்சின் ஆலோசனைகளை பெற வேண்டும் அல்லது சட்டமா அதிபரின் ஆலோசனை பெற வேண்டும் என் மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை கவலைக்குரியது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க சட்டத்தின் பிரகாரம் செயற்பட்ட போது அப்போதைய அரசாங்கம் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி அவரை பதவி நீக்கியது.

இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவது தவறானதொரு எடுத்துக்காட்டாகும்.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் மின் கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

33 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை தொடர்பில் மின்சார சபை குறிப்பிடும் தரவுகள் முற்றிலும் பொய்யானது.

மின்சார சபையின் வருமானம் குறித்து கணக்காய்வு செய்தால் உண்மையை அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

கவுன் அணிந்து வினாத்தாள் திருத்த சென்ற ஆசிரியைகளால் சர்ச்சை..!

0

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள், சேலைக்குப் பதிலாக கவுன் அணிந்து வந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், நாளை (18) முதல் மீண்டும் தங்கள் பணிகளில் ஈடுபடுவார்கள் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

பன்னிபிட்டி தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மையம், பாடசாலை அதிபர் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகளிடையே ஆடை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியைகள் நேற்று (16) சேலைக்குப் பதிலாக கவுன் அணிந்து வந்ததால், பாடசாலையின் பெண் அதிபர் குறித்த ஆசிரியைகளுக்குப் பரீட்சை மதிப்பீட்டு மையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் மதிப்பீட்டு மையம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவதால், அவர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அதிபருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஆசிரியைகள் வாதிட்டனர்.

இருப்பினும், பாடசாலை வளாகத்திற்குள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பார்வையாளர்களும் பாடசாலையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பெண் அதிபர் கூறினார்.

இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பதற்ற நிலைமையைத் தணிக்க பொலிஸார் அழைக்கப்பட்டனர், ஆனால் ஒரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை.

இதன் விளைவாக, மதிப்பீட்டு மையத்தைத் தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் ஜெயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், விடைத்தாள் திருத்தும் வளாகத்தில் ஒரு மதிப்பீட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பரீட்சை ஆணையாளர் , குறித்த ஆசிரியைகள் குழு மீண்டும் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் 20 சதவீதத்தால் மின் கட்டணம் குறைப்பு..!

0

சராசரியாக 20 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த கட்டண திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்!

0

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடகத் தந்தை என அழைக்கப்படும் குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை ம.சண்முகலிங்கம் நடிகராக, நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப் போதானாசிரியராக, நாடகக் களப் பயிற்சியாளராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள்; கடற்படையால் மீட்பு..!

0

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த மர்ம பொருளானது சீரற்ற காலநிலையால் கரையொதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்மைக் காலமாக வடக்கு கடற்பரப்பில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.

இவ்வாறு கரையொதுங்கிய உருளை வடிவிலான மர்மப் பொருளை கடற்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு கடற்கரையிலும் இவ்வாறு ஒரு மர்மபொருள் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Alert !!