Wednesday, February 5, 2025
Huisதாயகம்அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான திகதிகளில் மாற்றம்; பிரதமர் தெரிவிப்பு..!

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான திகதிகளில் மாற்றம்; பிரதமர் தெரிவிப்பு..!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேற்படி, விடயத்தினை நாடாளுமன்றத்தின் இன்றைய(08) அமர்விலேயே அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டில் இருந்து சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என்றும் கொரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம் பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!