Wednesday, February 5, 2025
Huisதாயகம்தமிழர் தாயகத்தில் பெண்ணை தாக்கிய பொலிசார்; சிறிநேசன் எம்.பி சீற்றம்..!

தமிழர் தாயகத்தில் பெண்ணை தாக்கிய பொலிசார்; சிறிநேசன் எம்.பி சீற்றம்..!

பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக சென்ற பெண்ணை மோசமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய (08.01.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படுகின்ற பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்கு சென்ற பெண் அறைக்குள் பூட்டப்பட்டு மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசுகின்றோம். ஆனால் எங்கோ அதனை அசுத்தப்படுத்தக் கூடிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பெண்ணுக்கு மரியாதை கொடுக்கின்ற தேசமாக நாம் எமது நாட்டைப் பார்கின்றோம். ஆனால் தெருவில் செல்லும் போது குறித்த பெண்ணை கேலி செய்து துன்புறுத்தியமைக்காக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது அந்த பெண் படுமோசமாக தாக்கப்பட்டிருக்கின்றார். அதனால் அவர் இப்போது வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார்.

குறித்த காவல்துறை உத்தியயோகத்தருக்கு கிளீன் சிறீலங்கா திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!