திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் டெல்லி, பிஹார் மாநிலங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை 6.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபெத்தில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.