வாகன வடிவமைப்பில் “ஏரோ டைனமிக்ஸ்” என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வாகனங்கள் போன்ற திடமான பொருட்கள், காற்றின் மீது மோதும் போது ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து அதற்கு ஏற்பவே வாகனங்களின் வெளிப்புற ( உட்புற ) வடிவமைப்புகள் கூட உருவாக்கப்படுகிறது.
பொதுவாக பல கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனைகளின் பின் உற்பத்தி செய்யப்படும் இந்த வடிவமைப்புகளில் செய்யப்படும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட சிறிதும் பெரிதுமாக பல பின் விளைவுகளை ஏற்ப்படுத்தலாம்.
பொதுவாக இவை எரிபொருள் மற்றும் சக்தி செலவுகளை அதிகரிக்கும், வாகன இன்ஜினில் பாதிப்புகளை ஏற்படுத்தும் , உச்சகட்டமாக நிலத்துடன் வாகனத்தின் பிடிப்பினை குறைத்து விபத்துகளை கூட உருவாக்கலாம்.
உரிமையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் உயிர் ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதாலேயே அனேக நாடுகளில் வாகன அமைப்பில் மாற்றம் என்பது சிறப்பு அனுமதிகளின் பின்னரே செய்யப்பட முடியும். பின்னர் கடுமையாக கண்காணிக்கவும் படும்.
இலங்கையில் கூட அது சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் இருக்கவில்லை. இப்போது Clean Sri Lanka வில் ஒரு அங்கமாக எடுத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது அவ்வளவுதான்.
இதில் உடனடியாக நன்மையை அடையப்போகிறவர்கள் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தான். இதைவிட அந்த வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள், தெருவில் செய்யும் செல்லும் மற்ற வாகனங்கள், பாதுசாரிகள் என்று எல்லோருக்கும் ஒருவிதத்தில் நன்மை அளிக்கும் விடயமே.
இதனால் உண்மையில் பாதிக்கப்பட போகிறவர்கள் வாகன அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்யும் 200 சிறு தொழிற் சாலைகளும் வியாபாரிகளுமே.
இவர்களை கூட அரசாங்கத்தின் கட்டாய 30 வீத வாகன உதிரி பாகங்களை இலங்கையில் உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சரியாக உள்வாங்கப்பட்டால் அந்த பாதிப்பினையும் குறைக்கலாம். சிறிதான தொடக்கங்கள் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்