இலங்கயில் தற்போதைய ஆளும் NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் , பெண் எம்பி ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக கூறி மனைவி விவகாரத்துக்காக சட்ட நடவடிக்கை வரை சென்றுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
NPP எம்.பியான தனது கணவனின் காதல் தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, விவாகரத்து கோரி ஹோமாகம நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவருடைய கணவர், பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் தனது தனிப்பட்ட ஜீப்பைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு , குறித்த பெண் எம்.பியின் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர் முன்பு பிலியந்தலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.