யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கம் 5 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக் கழக கலைப் பீட மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க பல்கலைக் கழக நிர்வாகம் முறையாகத் தலையிடத் தவறியதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.