Wednesday, February 5, 2025
Huisதாயகம்கஜேந்திரகுமார் விடுத்த அழைப்பு; இறுதி நேரத்தில் காலை வாரிய தமிழரசு கட்சி..!

கஜேந்திரகுமார் விடுத்த அழைப்பு; இறுதி நேரத்தில் காலை வாரிய தமிழரசு கட்சி..!

புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மாலை (28.01.2025) மாலை இந்தக் கலந்துரையாடல் நடைபெறுவதாக இருந்தது.

எனினும், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தொடர்பு கொண்டு, பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை (27.01.2025) 4 மணிக்கு தமது கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும், தான் விடுத்த அழைப்பு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் வரை காத்திருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘எமது அழைப்பு தொடர்பில் சிறிதரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் இன்னமும் இது பற்றிக் கலந்துரையாடவில்லை எனவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் இதுபற்றி ஆராய்ந்து, முத்தரப்பு சந்திப்பில் தமிழரசுக் கட்சி பங்கேற்குமா, இல்லையா? என்ற தீர்மானத்தை அன்றைய தினமே அறியத் தருவதாகவும் சிவிகே தெரிவித்ததாக கஜேந்திரகுமார் சுட்டிக் காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!