Monday, January 20, 2025
Huisஉலகம்கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்..!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்..!

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

“நான் ஜனாதிபதியாகிய பின் அமெரிக்காவின் மானியங்கள் உள்ளிட்ட உதவிகள் கனடாவுக்கு கிடைக்காது என்பதை அறிந்தே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார் “ – என டிரம்ப் கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகக் கனடாவை இணைப்பதற்குத் தனது ஆட்சியில் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தரப்படும் என்று டிரம்ப் கூறினார்.

இதனைக் கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்தார்.”கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது ஒருபோதும் நடக்காது” – என்று கூறியிருந்தார் ட்ரூடோ. மேலும், கனடா அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து, கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

ட்ரூடோ இராஜினாமா செய்ததைச் சுட்டிக்காட்டும் வகையில், மீண்டும் ட்ரூடோவை கேலி செய்துள்ள எலான் மஸ்க்,

“ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை” என்று விமர்சித்துள்ளார். எனவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!