Monday, January 20, 2025
Huisஇந்தியாஇந்திய மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சுக்கு தமிழக முதல்வர் கடிதம்..!

இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சுக்கு தமிழக முதல்வர் கடிதம்..!

இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

‘காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப் படகையும் 8ஆம் திகதி இலங்கைக் கடற் படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளனர். அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடிப்பதால், குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!